யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைமையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) நடைபெற்று வருகிறது.
மும்படையினர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், துணைக்கள தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் வழமைக்கு மாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
மேலும் பல பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மிகுந்த கவனம் செலுத்த உள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.