தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகளுக்கு தடை!

Date:

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில்  தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இதன் நோக்கம் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள் இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், இந்த புதிய திட்டம் தற்போது பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகளில் தலையிடாது என்று அவர் தெரிவித்தார்.

முறையான தரநிலைகள் இல்லாமல் சட்டவிரோத தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

நாட்டில் உள்ள நுகர்வோருக்கு இதுபோன்ற சாதனங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது எமது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும்.

இதற்காக, இந்த மாத இறுதிக்குள் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இறுதியில் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.

“இந்த அமைப்பு தற்போது பயன்பாட்டில் உள்ள எந்த கையடக்க தொலைபேசிகளையும் பாதிக்காது என்பதுடன், வெளிநாட்டினர் பயன்படுத்தும் தொலைபேசிகளுக்கும் எந்த தடையும் ஏற்படுத்தாது  என்றார்.

 

 

 

Popular

More like this
Related

அஸ்ஸைய்யித் ஸாலிம் ரிபாய் மெளலானாவின் தாயாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

இன்று முற்பகல் காலமான பஹன மீடியாவின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய்...

அடுத்த மாதம் முதல் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும்!

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண...

நாட்டில் “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் பணிகள் நாளை ஆரம்பம்

சுகாதார சேவையின் உச்ச பலனை  இலகுவாக பெற்றுக்கொள்வதை  உறுதி செய்வதற்காக, சுகாதார...

பஹன மீடியா தலைவரின் தாயார் மறைவு!

பஹன மீடியா நிறுவனத்தின் தலைவரும் மீட்ஸ் செயல்திட்டத்தின் ஸ்தாபகருமான சமூக செயற்பாட்டாளர்...