நாட்டில் மோசமடைந்துள்ள காற்றின் தரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Date:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Popular

More like this
Related

வாகன இறக்குமதி மீதான 50% மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கம் விதித்திருந்த 50 சதவீத மேலதிக...

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான...

நாட்டின் பல பகுதிகளுக்கு மழை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

இலங்கையில் பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்!

இலங்கையிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயமும்,  பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர...