பதுளை மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Date:

பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, லுனுகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் அடைமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் ஓடைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பனிமூட்டத்துடன் கூடிய குளிரான காலநிலை நிலவி வருகிறது.

பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்த அபாய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்போர் மண்சரிவு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்றி மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் எமது அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...