வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும்

Date:

வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பாக விரும்பும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும் எதிர்வரும் 01ஆம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை  கொழும்பு வௌ்ளவத்தையில் உள்ள சபையர் ஹொட்டலில் (Hotel Sapphire) நடைபெறவுள்ளது.

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் உயர் கல்வி முறையை மையமாகக் கொண்ட விசேட குழுவினர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

குறித்த இலவச கருத்தரங்கில் இலங்கையில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பங்குகொள்வதுடன், மாணவர்களுக்கு 25 முதல் 50 வீதமான புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வானது வெளிநாட்டில் கிடைக்கும் பரந்த கல்வி வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் உயர்கல்வி பயணத்தைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உங்களுடைய தகைமை மற்றும் பெறுபேறுகளுடன் கருத்தரங்கிற்கு வருகை தாருங்கள். பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பங்குபற்றல் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

Hybrid International Campus & Hybrid Visa Centre ஏற்பாட்டில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...