14 நாட்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள் விடுதலை!

Date:

ரோஹிங்யா முஸ்லிம்களில் கைதான 12 நபர்களும் விடுவிக்கப்பட்டு முல்லைத்தீவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இலங்கைக்கு வந்திருந்த ரோஹிங்யா அகதிகளில் 12 நபர்கள் சட்ட விரோதமாக ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், இன்று (08) அவர்கள் மீதான குற்றச்சாட்டை சி.ஐ.டியினர் வாபஸ் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, குறித்த 12 நபர்களும் விசா இன்றி உள்ளே இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு முல்லைத்தீவில் வைக்கப்பட்டிருந்த 103 நபர்களுடன் இணைக்கும் நோக்கில் திருகோணமலையில் இருந்து விடுவிக்கப்பட்டு முல்லைத்தீவுக்கு பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 115 மியன்மார் அகதிகளுடன் படகொன்று முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...