50 தொன் பேரீச்சம்பழங்களை சவூதி அரேபியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது!

Date:

உலக முஸ்லிம்களின் புனிதஸ்தலமான மதீனாவும் மக்காவும் அமைந்திருக்கின்ற சவூதி அரேபியாவானது உலகம் பூராக உள்ள மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை மிகச்சிறப்பாக செய்து வருகின்ற அதேவேளை முஸ்லிம்களுடைய மார்க்கம் தொடர்பான விடயங்களிலும் தன்னுடைய பங்களிப்பை தொடராக செய்து வருகின்ற ஒரு நாடாகும்.

அந்த வகையில் பல வருடங்களாக சவூதி அரேபியா அரசு குறிப்பாக அதனுடைய தொண்டு நிறுவனங்களும் கூட இலங்கை முஸ்லிம்களுக்கு ரமழான் நெருங்குகின்ற போது பேரீச்சம் பழங்களை அன்பளிப்பாக வழங்குகின்ற ஒரு மரபு தொடராக இருந்து வருகின்றது.

அந்தவகையில் இம்முறையும் ரமழான் நோன்பு நெருங்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் சவூதி அரேபியா அரசு 50 தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு வழங்கியிருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

இந்த நிகழ்வு புத்தசாசன மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களின் பங்களிப்புடன் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களும் கலந்துகொண்டு பேரீச்சம் பழங்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில்நாடாளுமன்ற உறுப்பினர்களான  காதர் மஸ்தான், ரிஷாத் பதியூதீன், பிரதி சபாநாயகர் ரிஸ்வி ஸாலிஹ், அரச அதிகாரிகள் மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...