‘சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை’

Date:

சீனாவில் பரவும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ்’ (HMPV) என அழைக்கப்படும் வைரஸ்  தற்போது சீனாவில் மட்டுமே பரவுகிறது. இதுவரை இது பெரும் அச்சுறுத்தலாக கருதப்படவில்லை, ஆனால்  மேலதிக கண்காணிப்புக்குட்படுத்தப்பட வேண்டும்,” என சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் அறிகுறிகள் பெரும்பாலும் COVID-19 நோயின் அறிகுறிகளோடு ஒத்ததாக இருக்கும். இந்த வைரஸ் மற்ற நாடுகளை பாதிக்குமா அல்லது COVID-19 போன்ற தொற்றுகளை மீண்டும் உண்டாக்குமா என பற்றிய ஊகங்கள் பல உருவாகியுள்ளன.

இதே வேலை கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி,

“COVID-19 மற்றும் HMPV க்கு இடையே எவ்வித வேறுபாட்டும் இருக்காது. இதனை வைரஸ் ஆய்வுகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும், இருப்பினும், விமான நிலையங்களில் மற்றும் பிற நுழைவுப் புள்ளிகளில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்த வைரஸ் புதியதல்ல என்றும், பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி (Virology) நிபுணர் டாக்டர் ஜூத் ஜெயமஹா கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, சீனாவின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான சுவாச நோய்த்தொற்றுகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸினால் ஏற்படுகின்றன. இதே போன்று, ரைனோவைரஸ், RSV மற்றும் HMPV போன்ற வைரஸ்களும் சிறிய அளவில் காணப்படுகின்றன. இந்த வைரஸ்கள் புதியவை அல்ல, மேலும் உலகளவில் பரவ வாய்ப்பில்லை.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் கைகளைக் கழுவுதல், உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருப்பது போன்றவை பயனுள்ளதாக இருக்கும் எனவும், நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...