HMPV வைரஸ் குறித்து அரசாங்கம் விழிப்புடன் உள்ளது: சுகாதார அமைச்சர்

Date:

சீன வைரஸ் குறித்து அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அத்துடன் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் குறித்து தகவல் கிடைத்தால், அது குறித்து நிச்சயமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் வைத்தியர் நிஷாந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருவதாகக் கூறினார்.

இதேவேளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கையிலும் HMPV வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இந்த ஆண்டு HMPV வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இன்னும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...