2016 ஆம் ஆண்டில் ‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என்று மேற்கோள் காட்டி வெறுப்புணர்வு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா அபராதமும் 9 மாத சிறைத்தண்டனையும் விதித்தது.
இன்று ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுகின்ற நிலையில் கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற இல: 3இன் நீதிபதி தண்டனைச் சட்டத்தின் 291B கீழ் இந்த தீர்ப்பை வழங்கினார்.
ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தேரரின் தேகாரோக்கியத்தை கருத்திற்கொண்டு தண்டனையை குறைத்து வழங்குமாறு வேண்டியிருந்தனர்.
‘இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்றும் அதனை அவர் துடைத்தெறிவார்’ என்றும் வெறுப்பு பேச்சு பரப்பியதன் பேரில் முஸ்லிம் சமூகத்திடமிருந்து பல முறைப்பாடுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கிருளப்பன பொலிஸாரால் நீண்டகால விசாரணையின் பின்னர் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு இந்த வழக்கை முன்னெடுத்திருந்தனர்.