சபாநாயகரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு

Date:

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸ் இக்னாசியோ சன்சேஸ் அமோர் (Jose Ignacio Sanchez Amor) உள்ளிட்ட தூதுக் குழுவினர் கடந்த 17ஆம் திகதி  சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் சபாநாயகருக்கும், புதிய அரசாங்கத்திற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் குறித்த இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

இதில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வகிபாகத்தைப் பாராட்டிய அவர், இந்த ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருப்பதற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

உண்மையான ஜனநாயகப் பண்புகளுடன் கூடிய, மிகவும் வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை நோக்கி அரசாங்கம்  தற்போது செயற்பட்டு வருவதாகவும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்த நாட்டில் முதல் முறையாக இயலாமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும்  சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...