கொழும்பு தனியார் மருத்துவமனையில் இன்று (13) மாலை காலமான புத்தளம், மத்ரஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக கொழும்பு குப்பியாவத்தை பள்ளிவாசலில் இன்று இரவு 9.00 – 10.00 மணிவரை வைக்கப்படும்.
பின்னர் அவரது சொந்த ஊரான புத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை (14) பகல் 2.00 – 3.30 வரை மத்ரஸதுல் காசிமிய்யாவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
அதன் பின்னர் மஸ்ஜிதில் பகாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஜனாசா நல்லடக்கம் செய்யப்படும்.