சீனாவை சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு: சீன ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு!

Date:

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை  பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கை சந்திக்கவுள்ளவுள்ளார்.

அத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சீனா நேரப்படி  காலை 10.25 அளவில் சென்றடைந்தார்.

சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் ஷியாடோங் ஜனாதிபதியை வரவேற்றார். அதன் பின்னர் சீன இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

சீன ஜனாதிபதி Xi Jinping-இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...