தென் கொரிய ஜனாதிபதி அதிரடியாக கைது: பதவி விலகுவதற்கு முன்பு கைது நடவடிக்கையை எதிர்கொண்ட முதல் நபர்!

Date:

இராணுவ சட்டத்தை பிரகடனம் செய்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலை அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்தனர்.

முன்னதாக ஆதராவளர்களின் போராட்டங்கள் காரணமாக கடந்த ஜனவரி 3ம் தேதி கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பினார்கள்.

இப்போது இரண்டாது முயற்சியில் கைதாகி உள்ளார். தென்கொரியாவின் வரலாற்றில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றுவதில் ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி யூன் சுக்-இயோல் இராணுவ அவசர நிலையை அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவசரநிலை சில மணி நேரங்களில் கைவிடப்பட்டது.

எனினும் ஜனாதிபதி பதவி விலகக் கோரி தலைநகர் சியோலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திடீர் கிளர்ச்சி காரணமாக ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அதிபர் யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

ஆனால் அவருமே நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவியை இழந்தார். இதனிடையே பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியாக யூன் சுக் இயோலுக்கு எதிராக தென் கொரிய நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.

இதன் காரணமாக யூன் சுக் இயோலை ஜனவரி 3 ஆம் திகதியில் கைது செய்ய அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், அவரை கைது செய்யும் இரண்டாவது முயற்சியில் புதன்கிழமை அதிகாலையில் யூன் சுக் இயோலின் வீட்டின்முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் வந்தார்கள்.

ஆனால், கைது நடவடிக்கை குறித்து முன்னரே அறிந்ததைப்போல, யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் 6500 பேர் ஒன்றுகூடி, பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். மேலும், மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது.

கைது முயற்சியை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதை அடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு, அவர் கைது செய்யப்பட்டார். இன்னும் 48 மணி நேரம் அதிகாரிகள் கண்காணிப்பில், யூன் சுக் இயோல் இருப்பார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டத்தின் முன் ஆட்சி முற்றிலும் சரிந்து விட்டது’ என கைதுக்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி, யூன் சுக் இயோல் பதிவிட்ட வீடியோவில் கூறியுள்ளார். தென்கொரியாவில் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...