புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 18 மாணவர்கள்!

Date:

நாடளாவிய ரீதியில் 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதில் அதிகூடிய மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

மேலும், 17 மாணவர்கள் 187 முதல் 186 வரையான மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024 ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05 ஆகும். இந்த ஆண்டு முடிவுகளின்படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இது சற்று அதிகமாகும்.

இதேவேளை, கடந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...