போர்க்களம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா: காசாவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ஹொலிவூட் நடிகரின் வீடு தீக்கிரை

Date:

காசா மக்களை முழுமையாக அழிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் வூட்ஸின் 1 மில்லியன் டொலர் மதிப்புடைய வீடு தீக்கிரையானது.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, காசா மக்களுக்கான நீதியின் குரலாக சிலர் விவரிக்கின்றனர்.

காசாவில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களையும் படுகொலை செய்ய வேண்டும் என குரல் கொடுத்த அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் வூட்ஸ், தன் சொந்த வீட்டை காட்டுத்தீயில் இழந்த நிலையில் தனது மன வேதனையை வெளிப்படுத்தினார்.

காட்டுத்தீயால் ஜேம்ஸ் வூட்ஸின் பெறுமதியான பங்களா முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. இந்த துயரமான சூழலில், CNN செய்தியாளரிடம் கண்ணீர் வழிந்தபடி அவர் அளித்த பேட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

போர் நடக்கும் நாடுகளில் எப்படி எல்லாம் தரைமட்டமாக காட்சி அளிக்குமோ அப்படிதான் கலிபோர்னியாவில் தற்போது பெரும்பாலான பகுதிகள் முக்கியமான பகுதிகள் காட்சி அளிக்கின்றன.

ஜனவரி 7, 2025 முதல் இந்த காட்டுத்தீ நிலவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பகுதியையும் சுற்றியுள்ள பகுதிகளையும் தொடர்ந்து காட்டுத்தீ பாதித்து வருகிறது. சில இடங்களில் மணிக்கு 80-100 மைல்கள் (130-160 கிமீ/மணி) வேகத்தில் கூட காட்டுத்தீ வெப்பமான அனல் காற்றை பரப்பிக்கொண்டு இருக்கிறது.

இதுவரை காட்டுத் தீயில் 11 பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 180,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 4 நாளாக அங்கே காட்டுத்தீ பரவிக்கொண்டு இருக்கிறது. அங்கே மொத்தமாக 5 விதமாக காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது.

1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 750 கோடிக்கும் அதிகமாக இதனால் நஷ்டமாகி உள்ளது.

பாரிஸ் ஹில்டன், பில்லி கிரிஸ்டல் மற்றும் அந்தோனி ஹாப்கின்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பலரும் எறிந்த தங்கள் வீடுகளின் காட்சிகளை  பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த காட்டுத்தீ காரணமாக 29,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஏற்கனவே கருகிவிட்டன, மேலும் 2,93,000 குடியிருப்பாளர்கள் வெளியேறி உள்ளனர். வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தீ நாசமாக்கி உள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் கருகி உள்ளன.

கிட்டத்தட்ட அங்கே 4 லட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக பாலிசேட்ஸ் தீ அதாவது பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மிக மோசமாக அமைந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அங்கேதான் அதிக அளவில் ஹாலிவுட் பிரபலங்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.. அங்கே பெரும்பலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அங்கே தீ விபத்தை கிளைமில் இருந்து நீக்கி உள்ளன. அதாவது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தீ விபத்திற்கு பணத்தை கிளைம் பண்ண முடியாது என்று அறிவித்துள்ளன.

சரியாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் எல்லா நாடுகளும் ஒரே நேரத்தில் இப்படி கிளைம் பண்ண முடியாது என்று அறிவித்து கடுமையான விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் அங்கே வீடுகளை இழந்தவர்கள் இனி அதை கட்டுவது கடினம்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...