வட, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டம்: பொலிஸார் மனுத்தாக்கல்

Date:

வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் சார்பில் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் இன்று (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.இப் போராட்டம்  வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“அரசாங்கம் இனியும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக எங்களுக்கான அரச வேலைவாய்ப்பை பரீட்சை இன்றி உறுதிப்படுத்து” என்ற கோரிக்கைக்கு அமைவாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் காலங்களில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தபோதும் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சிறந்த தீர்வினை பெற்று தருமாறு கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...