இன்று முதல் மின் விநியோக தடை அமல்படுத்தப்படாது

Date:

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன

இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு நேரிட்டதுடன் அதேநேரம் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் நேற்றைய தினம் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்பட்டது.

மேலும் செயலிழந்த 3 மின் பிறப்பாக்கிகள் தேசிய மின் கட்டமைப்புடன் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதால் மின் விநியோகத் தடையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...