கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 6 யானைகள் உயிரிழப்பு!

Date:

கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பரிதாபகரமாக 6 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு யானைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், தடம் புரண்ட ரயில் என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...