கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Date:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தனது கையடக்கத் தொலைபேசியின் கட்டணத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை, அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கெஹலிய  ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...