ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமனம்!

Date:

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு, களனி பல்கலைக்கழகத்தில் வெகுசன தொடர்பாடல் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர்  சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு  ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபு ஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...