தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்  உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது, மாத்தறை நீதவான் நீதிமன்றினால் இன்று (28) விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2023 அன்று, கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று, பாதாள குழு உறுப்பினர் ஹரக் கட்டாவுக்கு நெருக்கமான ஒரு குழுவைக் கைது செய்ய மாத்தறையின் வெலிகம பகுதிக்குச் சென்றது.

அதன்போது, வெலிகமவில் உள்ள W 15 ஹோட்டலின் திசையிலிருந்து சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதை அடுத்து, அந்த ஹோட்டலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...