பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

Date:

பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமழான் நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த  அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார், மேலும் விரிவான சம்பவ அறிக்கையையும் கோரினார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...