முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின்‌ ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை  பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு!

Date:

பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் M.S.M. நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையில்
கடந்த 9 ஆம் திகதி நடைபெற்றது.

இச்செயலமர்வில் சுமார் 32 பள்ளி வாசல்களின்‌ 100 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்த கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், பள்ளிவாசல் எவ்வாறு ஒரு சமூக மையமாக செயற்படுவது, இலங்கை வக்பு சபை, இலங்கை வக்பு நியாய சபை மற்றும் முஸ்லிம் தரும நம்பிக்கை பொறுப்புகள் (Trust) ஆகியன தொடர்பில் நம்பிக்கையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிமுகமும் அதன் சேவைகள் தொடர்பான தொடக்க உரையை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் M.I. பிர்னாஸ் அவர்கள் நடாத்தினார்கள்.

உதவிப் பணிப்பாளர் M.S. அலாஅஹ்மத், வக்பு பிரிவின் அதிகாரி அஷ் ஷேக் M.I. முனீர், வக்பு நியாய சபை பதில் செயலாளர் M.N.M. ரோஸன், ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுரைகளை வழங்கினார்கள். மேலும் இந்த கருத்தரங்கினை வக்பு பிரிவு பொறுப்பதிகாரி A.S.M. ஜாவித் தொகுத்து வழங்கினார்

மேலும் அஷ்ஷேக் M A. பஸ்லான் (நளீமி) அவர்களினதும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஜம்மியயாவின் தலைவர் மௌலவி. MNM பர்ஹத் அவர்களினால் ஆன்மீக உரைகள் நிகழ்த்தப்பட்டன.

நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வினை முஸ்லிம் சமய பண்பாட்டால்கள் திணைக்களத்தின் ஹம்பாத்தோடட மாவட்டத்துக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தரான V. T. கணூன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...