‘ஆக்கிரமிப்பு சிந்தனையும் தீவிரவாத போக்குக் கொண்ட ஒரு நாடுதான் இஸ்ரேல்; சவூதியின் சூடான அறிக்கை

Date:

சவூதி அரேபியாவின் இறைமைக்கு சவால் விடும் வகையில் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒரு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காசா மக்களை எந்த விதமான மனிதாபிமானமும் இன்றி படுகொலை செய்த ஆக்கிரமிப்பு சிந்தனையும் தீவிரவாதம் போக்குக் கொண்ட ஒரு நாடுதான் இஸ்ரேல்’ என்று சவூதி அரேபியா வெளிநாட்டமைச்சு சூடான அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ளது.

காசா மக்களை ஜோர்தானிலும் எகிப்திலும் குடியமர்த்த வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கூற்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதையடுத்து முஸ்லிம் நாடுகளும் ஏனைய பல நாடுகளும் அதற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் சவூதி அரேபியாவும் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவும் சவூதி அரேபியாவையும் கடுமையாக சாடியுள்ளார். அதாவது சவூதி அரேபியாவில் தாராளமாக இடவசதி இருக்கின்றது. காசா மக்களை சவூதியில் குடியமர்த்துங்கள் என்று நெதன்யாகு அறிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து சவூதி அரேபியாவும் இஸ்ரேல் குறித்து கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி பின்வருமாறு கூறியுள்ளது,

ஒரு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொலை செய்து அவர்களில் பெண்களும்இ சிறுவர்கள் என்ற நிலையில் எவ்வித மனிதாபிமானமும் இன்றி காசா மக்களை கொலை செய்த இஸ்ரேல்இ தீவிரவாதமும் ஆக்கிரமிப்பும் கொண்ட மனோபாவத்தை கொண்ட நாடு என இஸ்ரேலை சாடியுள்ளது.

பலஸ்தீன மக்களை பொறுத்தவரையில் பலஸ்தீன மண் அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்தவம் வாய்ந்தது என்பதை இத்தகைய நாட்டினால் புரிந்துகொள்ளவே முடியாது எனவும் சவூதி அரேபியா கடுமையாக தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...