ஜனாதிபதி அநுர துபாய் விஜயம்: இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் என எதிர்பார்ப்பு

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க   இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உட்பட 13 அதிகாரிகள் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி அநுரகுமார இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...