இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

Date:

இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்பு மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, இராணுவப்படைகளின் துணை பிரதானியாகவும், அதற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தில் பொதுப் பணியாளர் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.

இந்திய இராணுவ கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்லூரி ஆகியவற்றில் அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் அவர் தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் அவர் இரண்டாவது லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டு கஜபா படைப்பிரிவில் காலாட்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அத்தோடு இராணுவ ஊடக பணிப்பாளராகவும் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...