நாட்டில் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்

Date:

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை மறுதினம் முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில்  சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்திலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40  கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...