பட்ஜெட் நிறைவேற்றம்: ஆளுங்கட்சி அங்கத்தவர்கள் ஆதரவாகவும் எதிர்க்கட்சியினர் எதிராகவும் வாக்களிப்பு

Date:

2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 109 மேலதிக வாக்குகளால்  இரண்டாம் வாசிப்பு  நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.

7வது நாளாக இன்று நடைபெற்றிருந்த வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தீர்மானித்திருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் சபையில் விவாததத்தின் போது தெரிவித்தார்.

இன்று நடைபெறும் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...