மின் விநியோகத் தடை தொடர்பில் முழுமையான விசாரணை..!

Date:

மின் விநியோகம் நேற்று (09) மாலை வழமைக்குத் திரும்பியுள்ளபோதும் அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மின் சக்தி மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

அதேவேளை மின் விநியோகத் தடை தொடர்பில் இன்று (10) முழுமையான தகவல்களை வழங்கவுள்ளதாக மின்சார சபையின் தலைவர்  திலக் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மின்சார சபை உள்ளக குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மின் சக்தி அமைச்சின் மூலமும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

இனிமேல் இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பரிந்துரைகளை அந்தக் குழு முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் மின்சார துண்டிப்பு இடம்பெற்றுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி சீதுவை மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 6 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இவ்வாறான நாடளாவிய ரீதியான மின் விநியோகத் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...