இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (04) கொழும்பு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் உட்பட மேலும் பல முல்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றவுள்ளனர்.