சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Date:

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு, குற்றப் பிரிவு விசாரணைகள‍ை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய சந்தேக நபரான பெண் ஒருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் விபரம்

பெயர்: பின்புர தேவாஹே இஷார செவ்வந்தி
வயது: 25
தே.அ.அ.இல: 995892480v
முகவரி: 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகம

சந்தேக நபர் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்:

பணிப்பாளர் கொழும்பு, குற்றப்பிரிவு – 0718591727
கொழும்பு குற்றப்பிரிவு – 0718591735

சந்தேக நபர் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவோருக்கு பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நிதியிலிருந்து ரொக்கப் பரிசை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் அளிப்பவர்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...