காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துடன் ஆதம்பாவா எம்.பி சந்திப்பு

Date:

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களுடன் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்றுமுன்தினம்  சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மேளன உப தலைவர் அல்ஹாஜ் எம்.சீ.எம்.ஏ. சத்தார் (BSc BAd) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வினை பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எம். இல்ஹாம் பலாஹி (BA) வழி நடாத்தினார்.

சம்மேளனம் தொடர்பான பொது அறிமுகம், அதனூடாக முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பாக உப தலைவர் அல்ஹாஜ் எம்.சீ.எம்.ஏ. சத்தார் (BSc BAd) விளக்கியதுடன், இச்சந்திப்பின் நோக்கம் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

மேற்படி சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரினால் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வகையில் விஷேட உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

காத்தான்குடி பிரதேசத்தில் அடையாளப் படுத்தப்பட்ட பிரச்சினைகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினரினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், ஐயங்களுக்கான தெளிவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான செயற்பாடுகளின் அடுத்த கட்ட நகர்வாக இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...