சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகரை சந்தித்த துருக்கித் தூதுவர்: இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சு

Date:

இலங்கைக்கான துருக்கி தூதுவர் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut), சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலில், இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து சபாநாயகரும் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பாராளுமன்ற இராஜதந்திரம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் மீள ஸ்தாபித்தல் உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.

பாராளுமன்றத்திற்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக, துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட், பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்தார்.

இதன்போது பொதுவான ஆர்வமுள்ள துறைகளில் பரஸ்பர புரிதல் மற்றும் பங்களிப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய துருக்கித் தூதுவர், இலங்கைக்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான துருக்கியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...