புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அவ்வகையில், ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 மார்ச் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்ரி 1446 ரமழான் மாதத்தின் 01ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA)ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.