லெபனானில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி பலி

Date:

லெபனானில்  இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் குழுவின் முக்கிய தளபதி முகமது ஷாஹின் கொல்லப்பட்டார்.

முகமது ஷாஹின் ஹமாஸ் அமைப்பின் லெபனான் பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

லெபனானின் சிடோன் நகரில் முக்கிய சாலையில் சென்ற கார் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. பணயக் கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

அதேவேளை, இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. மேலும், லெபனானுக்குள் தங்கள் படைகளை இஸ்ரேல் நிலைநிறுத்தியுள்ளது. இந்த போர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் லெபானானில் இருந்து இஸ்ரேல் படைகள்  திரும்பப்பெறப்பட உள்ளது.

ஆனாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனானின் எல்லையோர கிராமங்களில் சில பகுதிகளில் இஸ்ரேல் படைகளை முழுமையாக திரும்பப்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹில்புல்லா  மற்றும் ஹமாஸ்  குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

டெல் அவிவ் மற்றும் ஹிஸ்புல்லா இடையே பல மாதங்களாக நடந்த பரஸ்பர ஷெல் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் நேற்று தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் தனது படைகளை திரும்பப் பெற உள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...

36 ஆண்டுகள் ஆகியும் 121 உயிர்களை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த LTTE இன் இரத்த வெறியின் ஆறாத வடுக்கள்.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சுவடுகளில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட ஏறாவூர் படுகொலை இடம்பெற்று...

பன்முகத்தன்மை மற்றும் சமூக அமைதி குறித்த சர்வதேச மாநாடு நைஜீரியாவில்..!(படங்கள்)

நைஜீரியத் தலைநகர் அபூஜாவில், சமூக அமைதி' குறித்த உலக முஸ்லிம் (ராபீதா)...