அரசியல்வாதியின் சிபார்சின் பெயரில் நிர்வாக சபையில் அங்கம் வகிக்க முடியாது: சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் இராஜினாமா

Date:

சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிருவாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபார்சின் பெயரில் வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்வதாக ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட்லெவ்வை தெரிவித்தார்.

தனது இராஜினாமா குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் இடைக்கால நிர்வாக சபை சிபார்சு செய்யப்பட்டு, அதில் 42 பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டது.

அதில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட்லெவ்வை என்பவரே தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...