இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் யால தேசிய பூங்கா!

Date:

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் முகாமையாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக யால தேசிய பூங்காவில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பூங்காவிற்குள் உள்ள பல ஏரிக் கரைகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, வனவிலங்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, மழைக்கால நிலைமைகள் குறையும் வரை, யால தேசிய பூங்காவை இன்று (01) முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, யால மண்டல எண் 1 உடன் தொடர்புடைய கட்டகமுவ மற்றும் பலதுபன நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன.

யால தேசிய பூங்காவின் நுழைவாயிலில் உள்ள நிமலாவ பகுதியில் உள்ள பல வீதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு காரணமாக பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக யால சஃபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜெயசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...