தாய்லாந்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு.!

Date:

மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்லாந்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் அவசர நிலையின் போது +66 812498011 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மியான்மாரில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாங்காக் மற்றும் தாய்லாந்தின் பிற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் நிரந்தர தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 200 இலங்கையர்கள் மியான்மாரில் தங்கியிருப்பதாகவும், மற்றொரு இலங்கையர் குழு தாய்லாந்தின் பாங்காக்கில் தங்கியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...