மத்தியக் கிழக்கில் நிரந்தர சமாதானத்திற்காக உழைக்கிறோம்: வெள்ளை மாளிகை இப்தாரில் ட்ரம்ப்

Date:

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த  முயன்று வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்க முஸ்லிம்களையும் அதேபோன்று அந்நாட்டிலுள்ள அரபு நாட்டு தூதுவர்களையும் அழைத்து நடாத்திய இப்தார் நிகழ்விலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

காசாவிலும் யெமனிலும் கடுமையான தாக்குதல் நடந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இவ்வாறானதொரு இப்தார் நிகழ்வை முஸ்லிம்களின் கடும் விமர்சனத்துடன் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உரையாற்றிய ட்ரம்ப்,

நான் எப்போதும் முஸ்லிம்களின் பக்கமே இருக்க விரும்புவதாகவும் அமெரிக்க தேர்தலில் தனக்கு சார்பாக வாக்களித்தமைக்காக எப்போதும் அவர்களுடைய நலனை கவனிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சில முஸ்லிம் நாடுகளுக்கு இடையே, வரலாற்று சிறப்பு மிக்க ஆபிரகாம் உடன்படிக்கை சாத்தியமில்லாதது என்று அனைவரும் கூறினர். ஆனால், நாம் அதனை சாத்தியப்படுத்தினோம்.

முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி, ஒளிமயமான, நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். உலகம் முழுவதும் அமைதியையே அனைவரும் விரும்புகிறோம், தேர்தலின் போது தன்னை ஆதரித்த இலட்சக்கணக்கான அமெரிக்க முஸ்லிம்களுக்கு நன்றி.

தேர்தலின் போது எங்களுடன் இருந்ததால், உங்களுடன் நான் இருக்க விரும்புகிறேன். இஸ்லாமிய சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தவும் முயன்று வருகிறோம்” என்றார்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...