மாலை நேரங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!

Date:

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை...

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும்...

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...