பணமோசடி தொடர்பில் யோஷித்தவின் பாட்டி டெய்சி கைது…!

Date:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷிதவின் தாய் வழி பாட்டியான டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க இன்று (05)  வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டதாகவும், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படு்த்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பெப்ரவரி மாத தொடக்கத்தில் சட்டமா அதிபர், யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு சொந்தமான ரூ. 59 மில்லியன் கூட்டுக் கணக்கு தொடர்பான பணமோசடி சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

2016 முதல் நடத்தப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக்சவினால் நிதி தொடர்பாக முறையான விளக்கங்களை வழங்க முடியவில்லை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, பணமோசடி சட்டத்தின் கீழ் இருவருக்கும் எதிராக காவல்துறையும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

விசாரணையின்படி, சந்தேகத்துக்குரிய நிதி நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளதுடன், டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்கவுடன் யோசிதவினால் பராமரிக்கப்படும் கூட்டுக் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது  கண்டறியப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...