‘அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசனையைக் கேளுங்கள்’ : காசாவுக்குள் தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்:

Date:

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், இப்போது காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

காசாவில் சமீபத்தில் தான் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்திருந்த நிலையில், இப்போது தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், காசா மக்களுக்கு இஸ்ரேல் கடைசி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், ஹமாஸ் பணய கைதிகளை விடுவிக்க மறுப்பதாகச் சொல்லி இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வான்வழித் தாக்குதலை ஆரம்பித்தது. இந்தச் சூழலில் இஸ்ரேல் அடுத்த கட்டமாக தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

மத்திய மற்றும் தெற்கு காசாவில் குறிப்பிட்ட இடங்களைத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கும் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முக்கியமான பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்று வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தைக் கைவிட்ட இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. அந்த வான்வழித் தாக்குதலில் 200 குழந்தைகள் உட்பட 506 பலஸ்தீனியர்கள் காசாவில் கொல்லப்பட்டனர்.

இந்த வான்வழித் தாக்குதலுக்கு மறுநாளே இஸ்ரேல் இந்த தரைவழி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்தவும் வடக்கு மற்றும் தெற்கு காசா இடையே பஃபர் மண்டலத்தை உருவாக்கவும் மத்திய மற்றும் தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளோம்” என்றார்.

நெட்சாரிம் வழித்தடத்தின் மையப்பகுதியை தங்கள் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. காசாவை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளைப் பிரிக்கும் முக்கிய பாதையான நெட்சாரிம் வழித்தடத்தின் பெரும்பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறிப்பாக சலா ஏ-தின் சாலை வரை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “காசா மக்களே, இது உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை.

அமெரிக்க அதிபரின் ஆலோசனையைக் கேளுங்கள். பணய கைதிகளை திருப்பி அனுப்பி ஹமாஸை உங்கள் மண்ணில் இருந்து அகற்றுங்கள். அதன் பிறகு உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும். அப்போது தான் உங்களால் உலகின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும்” என்றார்.

Popular

More like this
Related

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...

தொழில் திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை வாரம் ஆரம்பம்!

ஊழியர்களின் தீர்க்கப்படாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகளுக்கு...

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்

உள்ளூர்  பொறியியலாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள்...

மஹர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இஸ்லாத்தின் அடிப்படை கருத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துகளின் நெறிமுறை, தத்துவார்த்த மற்றும் நடைமுறை சாராம்சம் குறித்த...