சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிருவாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபார்சின் பெயரில் வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்வதாக ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட்லெவ்வை தெரிவித்தார்.
தனது இராஜினாமா குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் இடைக்கால நிர்வாக சபை சிபார்சு செய்யப்பட்டு, அதில் 42 பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டது.
அதில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட்லெவ்வை என்பவரே தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.
அவரது இராஜினாமா கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.