இம்தியாஸ் தான் தவிசாளர்: இராஜினாமா ஏற்கப்படவில்லை: ஜ.ம.சசெயலாளர்

Date:

இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அவர்களின் இராஜினாமா கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

‘இம்தியாஸ் பாக்கீர் மக்கார் சிரேஷ்ட தலைவர் அவர் பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார். காரணம் குறிப்பிடப்படவில்லை. அவரைபோன்ற சிரேஷ்ட தலைவர் ஒருவர் எமது கட்சியில் இருக்க வேண்டும். எனவே, இராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை எனவம் அவர் தெரிவித்தார்.

மேலும் எமது கட்சிக்குள் பிரச்சினை இல்லை, கட்சி பிளவுபடாது. பதவி விலகல் கடிதம் ஏற்கப்படவில்லை என்பதால் அவரே தற்போதைய தவிசாளர், அவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் எனவும் ரஞ்சித் மத்தும தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்திருந்தார்.

கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால திசைக்கான 11 பக்கங்களுக்கு மேல் முன்மொழிவுகளையும், அதை நினைவூட்டும் நான்கு பக்க கடிதங்களையும் இதற்கு முன்பு இரண்டு சந்தர்ப்பங்களில் எழுதியிருந்த இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், தனது இராஜினாமா கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சுரங்க ரணசிங்கவிடம் ஒப்படைத்திருந்தார்.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...