உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 3 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளும்  19 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை  ஏற்றுக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் 8, 9, 13, 15, 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப் பதிவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...