தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

Date:

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.

அந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆணைக்குழு மறுஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

மேலும், அந்த திட்டங்களில் தேர்தலுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய சில திட்டங்கள் இருப்பின், அவற்றை தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் அமைச்சரவையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, ஆணைக்குழு அந்த தீர்மானங்களை மறுஆய்வு செய்து அதுதொடர்பாக அரசாங்கத்திற்கு அறிவிக்கும் நடைமுறை பாரம்பரியமாக இடம்பெற்று வருகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...