புனித ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள்

Date:

ஹிஜ்ரி 1446ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை  இன்று ஞாயிற்றுக்கிழமை (30)  மாலை தென்பட்டமையினால் நாளை திங்கட்கிழமை (31) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டது.

புனித ஷவ்வால் மாத தலை பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

தலை பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) – பஹன மீடியா குழுமத்திற்குமிடையே நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பு!

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக "தூய இலங்கை" எனும் மகுடம் தாங்கி...

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி...

சமச்சீரற்ற ஒத்திசைவு: இலங்கை தனது பன்முகத்தன்மையை ஒரு பலமாக மாற்ற முடியுமா?

-ரிசா யெஹியா சிரேஷ்ட பொறியியலாளர். இலங்கையில் மீண்டும் மீளும் சமூகத் தகராறுகள் உடனடி பிரச்சினையை...

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக,...