3 கட்டங்களாக யுத்த நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்ற உடன்பாட்டை அலட்சியம் செய்து மிகவும் கடுமையான தொனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸை எச்சரித்துள்ளார்.
உடனடியாக பணயக் கைதிகளையும் இறந்த உடல்களையும் விடுவிக்கவேண்டும், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படா விட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.
நான் கூறுவதை ஹமாஸ் நிறைவேற்றவில்லை என்றால் ஹமாஸின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதேவேளை இஸ்ரேல் தரப்பில் நிவாரணங்கள் வரவிடாமல் தடுக்கும் வகையில் எல்லைகளை மூடி மின்சாரம், தண்ணீர் போன்றவைகளை தடைசெய்து மக்களை பட்டினியில் போட்டு துன்புறுத்தும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஹமாஸ் பின்வருமாறு கூறியுள்ளது,
உடன்படிக்கை நிபந்தனைகளை பின்பற்றுவோம், மத்தியஸ்தர்கள் இதனை நிறைவேற்றுவார்கள், இஸ்ரேல் தனது தரப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும் உடனடியாக 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கி தனது படையை முழுமையாக வெளியேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
(anadolu agency)