முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வருடாந்த இப்தார் நிகழ்வு..!

Date:

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இப்தார் நிகழ்வு புதன்கிழமை (26) திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

பள்ளிவாசல் சம்மேளனங்களின் தலைவர்கள், சர்வ மதத் தலைவர்கள், பௌத்த, கிறிஸ்தவ, இந்து சமயத் துறைகளின் பணிப்பாளர்கள் மற்றும் முன்னாள் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இன,மத வேறுபாடுகளின்றி திணைக்களத்தின் ஊழியர்களும், விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோரும் உரையாற்றினர்.

மௌலவி இர்ஷாத் ஹுமைதி விசேட உரை ஆற்றினார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...